காங்கிரஸ் கட்சியில் பெரும் கலாட்டா... செல்வப்பெருந்தகை கட்சி மாறுகிறாரா..?

காங்கிரஸ் கட்சிக்கு செல்வப்பெருந்தகை வந்த நேரத்தில், அவருக்கு உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இது வரையிலும் அவருக்கு கட்சியில் எந்த மதிப்பும் கொடுக்கப்படவில்லை.


ஆம், இப்போது ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் களமிறங்க கதர்ச் சட்டைகளிடையே பெரும் மோதலே ஏற்பட்டுள்ளது. போனமுறை மண்ணைக் கவ்விய செல்வபெருந்தகை, காங்கிரஸ் பிரமுகர் விக்டரி மோகனின் மகன் ஜெயக்குமார், முன்னாள் எம்.பி விஸ்வநாதன் என பலரும் வரிசைகட்டி நிற்கின்றனர். இவர்களில் தற்போதைய நிலவரப்படி ஜெயக்குமாருக்குத்தான் அதிக சான்ஸ் என்கிறார்கள். 

இதனை ஏற்றுக்கொள்ள செல்வப்பெருந்தகை தயாராக இல்லை என்பதுதான் அவரது ஆதரவாளர்கள் கருத்து. ஆகவே, சீட் கிடைக்காது என்பது தெரிந்தவுடனே அவர் பாஜகவிற்கோ அல்லது மக்கள்நீதி மய்யத்திற்கோ ’ஜம்ப்’ ஆவார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். 

தி.முக.விடம் இருந்து ஸ்ரீபெரும்புதூர் கிடைக்குமா என்பது உறுதியாகத் தெரியாத நிலையில், அதுக்குள் கட்சி மாறும் அளவுக்கு காங்கிரஸ் பிரமுகர்கள் கொந்தளிப்பது செம காமெடிதான்.