திரும்ப வந்துட்டேனு சொல்லு!! விட்ட இடத்தை புடிக்குமா டிக் டாக் ??

டிக் டாக் செயலி மீது சில கடந்த சில மாதங்களாகவே புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.


அதாவது இந்த செயலி கலாச்சார சீர்கேடே ஏற்படுத்துவதாக கூறப்பட்டது

ஆகவே இந்த செயலியை தடை செய்யுமாறு பல தரப்பினர் வலியுறித்தினர் .


இதனால் இந்த செயலி இந்தியாவில் இதன் மார்க்கெட்டை சற்று இழந்து விட்டது என்றே கூறலாம்.


இந்த சர்ச்சையில் இருந்து விடுபடவும் இந்தியாவில் இழந்த மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் இந்த செயலியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  இந்த மாற்றங்கள் இந்தியர்களுக்காகவே ப்ரீத்தியேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் கூறியுள்ளது.


புதிய பாதுகாப்பு சிறப்பம்சங்கள்:

டிக் டாக் செயலியில் வினாடிகளுக்கு வீடியோ பதிவு செய்யும் வசதி உள்ளது இதனை பற்றிய கமெண்ட்களை அதை பார்க்கும் மற்ற பயனர்கள் பதிவும் செய்ய இயலும்


இந்த மாதிரியான கமெண்ட்களை பயனர்கள் விருப்பப்படி அகற்றும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


ஃபில்டர் கமெண்ட்ஸ் என்று அழைக்கப்படும் இந்த இந்த ஆப்ஷன் மூலம் சுமார் 30 வார்த்தைகள் வரையில் ப்ளாக் செய்ய இயலும் என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


ப்ளாக் செய்யப்பட்ட இந்த வார்த்தைகளை எப்போது வேண்டுமானாலும் பயனர்கள் அவரது விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்ளவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .


இந்த மாதிரியான வார்த்தைகளை பிளாக் செய்யும் வசதி தற்போது வெறும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது விரைவில் இது மற்ற மொழிகளுக்கு அறிமுகம் செய்யப்படும் என்றும் இந்த நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது


இந்த நடவடிக்கை பாதுகாப்பான இனைய சேவையை பயனர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இதன் மூலம் டிக் டாக் தான் இந்தியாவில் இழந்த இடத்தை பிடிக்க இயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.