பேத்தி மீது தீராத ஆசை! ஆனால் பாட்டியை சம்பவம் செய்த கொடூர இளைஞன்! அதிர வைக்கும் காரணம்!

தன் பேத்தியை ஒருதலையாக காதலித்து வந்த 2 இளைஞர்களை கண்டித்த மூதாட்டியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவமானது திருமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள வையம்பட்டி என்னும் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் அந்தப் பெண் தனக்கு இதில் ஈடுபாடுடில்லை என்று தெளிவாக கூறிவிட்டார். இருப்பினும் அந்த பெண்ணை அஜித் குமார் ஒருதலையாக காதல் செய்து வந்தார்.

அவ்வப்போது சிறு சிறு தொல்லைகளும் கொடுத்துக்கொண்டு இருந்தார். இத்தகைய அசௌகரியங்கள் பற்றி அந்த பெண் தன் பாட்டியிடம் கூறியுள்ளார். உடனே அவருடைய பாட்டி அஜித்குமாரை வன்மையாக கண்டித்துள்ளார். அஜித் குமார் மிகவும் ஆத்திரமாக அங்கிருந்து சென்றார்.

நேற்று தன் வீட்டின் முன் பாட்டி உறங்கி கொண்டிருந்தார். பாட்டியின் மீது மிகவும் கோபத்தில் இருந்த அஜித்குமார், தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இதற்கு இவருடைய உறவினரான பெருமாள் என்பவர் உதவியுள்ளார். இந்த சம்பவமானது திருமங்கலம் காவல் துறையினரிடம் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் விரைந்து வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அஜித்குமார் பெருமாள் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.