கழிவறையில் தமிழக அரசின் சின்னம் பொறித்த டைல்ஸ்! உபியில் தமிழர்களுக்கு ஏற்பட்ட அவமானம்!

உத்தரபிரதேச மாநிலத்தில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறையில் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சின்னம் மற்றும் மகாத்மா காந்தி உருவம் பொறிக்கப்பட்ட டைல்ஸ், ஒட்டப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.


உத்தரபிரதேச மாநிலத்தின் புலந்த்சாகர் மாவட்டத்தின், இச்சாவாரி  கிராமத்தில், சமீபத்தில்  தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சில கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.இந்த கழிவறைகளின் சுவர்களில் தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ கோபுரச் சின்னம் மற்றும் மகாத்மா காந்தி உருவம் பதிந்த டைல்ஸ்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  புலந்த்சாகர் மாவட்ட உள்ளாட்சித்துறை அலுவலர் இது குறித்து பேசிய போது,  உள்ளூர் சந்தையில் தான் இந்த  டைல்ஸ் கற்கள் வாங்கப்பட்டுள்ளது எனவும் இதே போன்று இன்னும் 13 கழிவறைகளில்  டைல்ஸ்கள் ஒட்டபட்டுள்ளதும் தெரியவந்ததை அடுத்து உடனடியாக அந்த டைல்ஸ்கள் அகற்றப்பட்டுவிட்டதாகவும், சம்மந்தபட்ட ஊரக வளர்ச்சி அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த சில தினக்களுக்கு முன்னர், மாத்மா காந்தியடிகளுக்கு எதிராக ஐ ஏ எஸ் பெண் அதிகாரி ஒருவரும் சர்ச்சைக்குரிய டீவீட் பகிர்ந்துள்ளதும் குறிப்பிடதக்கது.