மாதம் ரூ.20ஆயிரம் சம்பளம்..! உங்கள் மாவட்டத்திலேயே அரசுப் பணி..! காத்திருக்கும் தமிழக அரசின் வேலை வாய்ப்பு..!

தமிழகத்தில் விரைவாக 2215 2-ம் நிலை பல்நோக்கு சுகாதார ஆய்வாளர்கள் இடைக்கால பணியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தமிழகத்தில் இன்றுவரை 1372 பேர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 283 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும், 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நாடு முழுவதும் தற்போது மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நோய் பாதிக்கப்பட்டோரின் கணிசமாக குறைந்து வருகிறது. நோயாளிகள் குணமடைந்து வரும் எண்ணிக்கையையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்காக அல்லும் பகலும் அயராது பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் அடுத்த சில வாரங்களுக்கு கடுமையாக போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு உதவும் வகையில் தற்காலிக பணியாளர்களை 2-ம் நிலை பல்நோக்கு சுகாதார அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி 12-ஆம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல் பிரிவை படித்த ஆண்கள் இந்த பணிக்காக தேர்ந்தெடுக்கப்படுவர். 3 மாதங்கள் தற்காலிகமாக பணியாற்றுவர்.

அவர்களுக்கு வாதம் 20,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும். இவர்கள் மூலம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நோய்த்தடுப்பு பரவலாக்குவது ஆகிய செயல்களை செய்யவேண்டுமென்று சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து எந்தெந்த மாவட்டங்களில், எவ்வளவு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்பது குறித்த செய்தியும் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 98 பணியிடங்களும், குறைந்தபட்சமாக சென்னை புறநகர் பூந்தமல்லியில் 20 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. மொத்தமாக 2,215 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அரசாணையை வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியானது தமிழ்நாடு முழுவதிலும் இளைஞர்களிடையே வேகமாக பரவி வருகிறது.