காஷ்மீரில் யாத்ரீகர்களை வெளியேற்றும் அரசு! என்ன நடக்கப்போகிறது அங்கே? பி.ஜே.பி.யின் திட்டம்தான் என்ன?

குளிர்காலம் நெருங்கும் போதெல்லாம் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் அதிகரிக்கும் என்று சொல்லியபடி காஷ்மீரில் ஆயுதப் படைகளை குவித்து வருகிறது அரசு


தற்போது புதிதாக பொறுப்புக்கு வந்திருக்கும் பிஜேபி பஞ்சாயத்து தலைவர்களைக் கொண்டு காஷ்மீர் மாநில கிராமங்கள் தோறும் தேசியக் கொடியேற்றி தீவிரவாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் சவால் விடப்போகிறார் அமித்ஷா என்றார்கள்.அடுத்து,கேதார்நாத், பத்திரிநாத் வரும் இந்து யாத்திரிகர்கள் யாரும் காஷ்மீரில் தங்க வேண்டாம்,உடனடியாக வெளியேறுங்கள் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டது.

அடுத்ததாக பயணிகள் விமானம் மூலம் , பாதுகாப்புப் படை வீரர்களை காஷ்மீரில் குவிக்கத் துவங்கி இருக்கிறது அரசு.இதைத் தொடர்ந்து ஒரு அதிர்ச்சித் தகவல் வெளிப்பட்டது. அதன் படி,ஆகஸ்ட் 15ம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கின் கிராமங்கள் தோறும் பஞ்சாயத்துத் தலைவர்கள் கொடியேற்றிக் கொண்டு இருக்கையில் மோடி, தொலைக்காட்சியில் தோன்றி பொதுமக்கள் விருப்பத்தின்படி,காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்படுகிறது.

இனிமேல் ஜம்மு ஒரு தனி மாநிலமாகவும்,காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் இரண்டு தனித்தனி யூணியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டு விட்டதாகவும் வந்த தகவலை இப்போது ' வதந்தி' என்கிறது மத்திய அரசு.ஆனால் , சரிந்து வரும் பொருளாதாரத்துக்கு முட்டுக்கொடுக்க தேச பக்த்தியே சிறந்த வழி என்று பிஜேபியின் ட்ராக் ரெக்கார்ட் சொல்வதால் பதற்றம் நீடிக்கிறது. இதை நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் அடுத்த அறிவிப்பு வருகிறது.'

பள்ளிகளுக்கான 10 நாள் விடுமுறை ஒரு வாரம் முன்னதாக வரும் புதன்கிழமை முதலே துவங்கும்'!. அப்ப அதுதானே?.பாவம் இம்ரான்கான் எப்படி சமாளிக்க போறாரோ!