அலுவலக நேரத்தில் மாநகராட்சி ஊழியர்கள் டிக் டாக் வீடியோக்களில் நடித்து பொறுப்பின்றி நேரத்தை வீணடித்த சம்பவமானது தெலங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்ப்பரேசன் ஆபிசில் ஆடல் பாடல்! பெண் அதிகாரிகளின் டிக்டாக் கூத்து! முகம் சுழிக்கும் மக்கள்!

மொபைல் போன்களில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் டிக்டாக் ஒன்றாகும். நாள்தோறும் பல லட்சக்கணக்கான வீடியோக்களை பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த செயலியானது நிறைய விபரீதங்களை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் டிக்டாகில் வீடியோக்கள் படம் பிடித்துக் கொண்டிருந்த சம்பவமானது சமூகவலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த ரீதியில் பல்வேறு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை வழங்கும் பணியில் ஈடுபட்டு அனிதா,ஜோதி, ரவி ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் தங்களுடைய பணி நேரத்தில் பல்வேறு திட்டப் வீடியோக்களை படம் பிடித்து செயலியில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதே இடத்தில் கணினி பொறியாளர்களாக பணியாற்றி வரும் கவின் மற்றும் வீரன்ணா இவர்களுடன் இணைந்து வீடியோவில் நடித்திருந்தனர். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோக்கள் பெரிய அளவில் பரவ தொடங்கின.
பின்னர் இந்த வீடியோக்கள் மாநகராட்சி ஆணையரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. வீடியோக்களை பார்த்த ஆணையம் சம்பந்தப்பட்ட 5 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த சம்பவமானது தெலங்கானா மாநகராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.