3500 ரூபாய் கொடுத்தால் வீட்டுக்கே வருவேன்..! வைரலாகும் பெண் அதிகாரியின் விவகார வீடியோ!

திருமண நிதி உதவியை தருவதற்கு பெண் அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்ட சம்பவமானது வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு மூவலூர் இராமாமிருதம் அம்மையாரின் பெயரில் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிதியுதவிக்காக 2 பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரில் அங்கநாதவலசை  பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மனைவியின் பெயர் சத்யா. இத்தம்பதியினருக்கு சென்ற ஆண்டு திருமணம் நடைபெற்றது. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்பதால் மேற்கூறப்பட்ட நிதியுதவியை பெறுவதற்காக கந்தலி ஒன்றிய திருமண திட்ட நிர்வாக ஆய்வாளரான ராமக்கா என்ற பெண்ணிடம் விண்ணப்பம் அளித்துள்ளார்.

ராமக்கா இதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி கொண்டு வந்திருந்தார். இறுதியாக குமரேசன் ராமக்காவிடம் சென்று முறையிட்டுள்ளார். அப்போது ராமக்கா குமரேசனின் வீட்டிற்கு சென்றுதான் ஆய்வு செய்ய வேண்டும் என்று இழுத்தடித்தார். பின்னர், "ஆட்டோவில் தான் உனது வீட்டிற்கு செல்ல வேண்டும். எல்லாத்துக்கும் சேர்த்து 3,500 ரூபாய் பணம் எடுத்துவை" என்று கூறியுள்ளார். 

தன்னிடம் அவ்வளவு வசதியில்லை என்று ராமக்காவிடம் கூறியுள்ளார். பின்னர் ஒருவழியாக பணத்தை கடன் பெற்று ராமக்காவிடம் கொடுக்க சென்றனர். அப்போது அவருக்கு தெரியாமல் தம்பதியினர் வீடியோ எடுத்தனர். பணத்தை வாங்கிக்கொண்ட ராமக்கா அதனை எண்ணிவிட்டு அவருடைய பர்சில் வைத்துள்ளார். "நம்பர் எழுதிகோப்பா. நாங்களே உங்களை கூப்பிடுகிறோம்" என்றும் கூறியுள்ளார்.

இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.