ஊரடங்கால் தட்டுப்பாடு..! நோன்பு காலத்திலும் ரத்த தானம்! டாக்டர்களை நெகிழ வைத்த புரோட்டா மாஸ்டர் சவாத் அகமது..!

அரசு மருத்துவர் ஏற்பாடு செய்த ரத்ததான முகாமில் ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கும் ஒருவர் தானம் வழங்கிய செய்தியானது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.


சென்னை புறநகரான பொன்னேரியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக அனுரத்னா என்பவர் செயல்பட்டு வருகிறார். தற்போது தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ரத்ததான வங்கிகளிடம் ரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதற்காக பொன்னேரி அரசு மருத்துவமனை சார்பாக 25-ஆம் தேதியன்று ரத்த தான முகாம் அரங்கேற்றப்பட்டது. அந்த அந்த முகாமில் 20 பேர் கலந்து கொண்டாலே பெரியது என்று மருத்துவ குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுடைய எதிர்பார்ப்பை மிஞ்சும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்ததான முகாமில் கலந்து கொண்டனர்.

அதிலும் நெகிழவைக்கும் நிகழ்வாக, ரமலான் காலத்தில் நோன்பிருக்கும் பிரியாணி மாஸ்டரான சவாத் அகமது என்பவர் பங்கேற்றுள்ளார். அவரிடம் தனிநபர் விவரம் பெற்றபோது நோன்பு இருப்பதாக கூறியுள்ளார். அப்போது உங்களால் ரத்த தானம் தர இயலுமா என்று மருத்துவர்கள் கேட்டதற்கு, தன்னால் இயலும் என்ற அகமது கூறியுள்ளார். பின்னர் ரத்ததானம் கொடுத்துவிட்டு, அவர் வீட்டிற்கு சென்றார்.

அன்று மாலையே தலைமை மருத்துவரான அனுரத்னா, அஹமதை செல்போனில் அழைத்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். பின்னர் அவரை மறுநாள் மருத்துவமனைக்கும் அழைத்துள்ளார். அங்கு சாவாத் அஹமதுக்கு பொன்னாடை போற்றி புகழ்ந்துள்ளார். அந்த ரத்ததான முகாமில் பெறப்பட்ட ரத்தத்தை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தேவைக்கு ஏற்றவாறு அவர்களிடமிருந்து பெற்று கொள்வதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அனுரத்னா கூறினார்.

இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.