தலைநகரில் தலைகுப்புறக் கவிழ்ந்த அரசுப் பேருந்து! பயணிகள் கதி!

தெலுங்கானா மாநிலத்தில் அரசு பேருந்து ஒன்றில் லாரி மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து 5 பேர் காயம் அடைந்தனர்.


தெலுங்கானா மாநில அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புதன்கிழமை அதிகாலை எம்ஜே மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் அதி வேகத்தில் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று அந்த பேருந்தின் மீது மோதியது. இதன் காரணமாக பேருந்து நடு சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்தபோது பல பயணிகள் உறக்கத்தில் இருந்த காரணத்தால் திடீர் விபத்தால் பீதியடைந்தனர். இந்த விபத்தில் பயணிகள் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் பேருந்தில் இருந்த பயணிகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விபத்தை ஏற்படுத்திய அந்த மணல் லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்  சம்பவ இடத்திற்கு கிரேன் கொண்டு செல்லப்பட்டு பேருந்தானது அகற்றப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு இன்றி போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.