பேருந்து மோதியதில் சம்பவயிடத்திலேயே முருகேசன் என்பவர் உயிரிழந்த சம்பவமானது மதுரவாயலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பான சாலையில் அலட்சியம்! லேசாக தட்டிச் சென்ற பேருந்து! பிறகு சர்பத் கடைக்காரருக்கு நேர்ந்த விபரீதம்! தவிக்கும் குடும்பம்!
கடலூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் முருகேசன். இவர் மதுரவாயலுக்கு இடம்பெயர்ந்தார். அப்பகுதியிலுள்ள 100 அடி சாலையின் ஓரத்தில் சர்பத் கடை நடத்தி வந்தார். அவருடைய கடைக்கு ஐஸ் கட்டிகள் கொண்டு வரப்பட்டன.
சாலையின் விளிம்பில் நின்றுக்கொண்டு இடது புறமாக நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ஆட்டோவிலிருந்து ஐஸ் கட்டி பெட்டிகளை எடுத்து கொண்டிருந்தார். அப்போது சாலையின் வலது புறத்தில் நின்று கொண்டிருந்த அவர் மீது கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மோதியது.
மோதிய அதிர்ச்சியில் கீழே விழுந்த முருகேசனுக்கு பின்னந்தலையில் பலமாக அடிபட்டது. சம்பவயிடத்திலேயே அவர் உயிரிழந்தார். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் முருகேசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுநர் தீபனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்துக்குரிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவமானது மதுரவாயலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.