ஆமாம் எனக்கு அந்தப் பழக்கம் இருந்தது..! அது தான் அனைத்துக்கும் காரணம்! பிரபல நடிகையின் பகீர் ஒப்புதல்!

ஆரம்பக்கட்டத்தில் இருந்த மது பழக்கத்தினால் வாழ்வில் பல நல்ல விஷயங்களை இறந்ததாக நடிகை மனிஷா கொய்ராலா கூறியிருப்பது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோலிவுட் திரையுலகில் பாம்பே, முதல்வன், இந்தியன் ஆகிய பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மனிஷா கொய்ராலா. தன்னுடைய சிறந்த காலத்தில் கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இவருக்கு சாம்ராட் பாகத் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் அவருடன் விவாகரத்து பெற்றார்.

2012-ஆம் ஆண்டில் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. புற்றுநோய்க்கு எதிராக சிகிச்சை பெறுவதற்காக பிரிட்டன் நாட்டிற்கும் சென்றார். சென்று ஒரு வழியாக புற்றுநோயிலிருந்து தப்பித்த பிறகு இந்தியா திரும்பினார். தற்போது புற்றுநோய் போன்ற நோய்களுக்கு எதிராக பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

நைனிடாலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் கூறுகிறார், "என்னுடைய வாழ்வில் நிகழ்ந்தவற்றை குறித்து புத்தகம் எழுதியுள்ளேன். என்னை பார்த்து யாரேனும் புற்றுநோயிலிருந்து தப்பித்தேன் என்று கேலி செய்தால் அதனை மனமார ஏற்றுக்கொள்வேன். என்னுடைய நடிப்புத் திறமையை பற்றி மக்கள் ஒருநாள் போற்றி பேசுவர் என்ற நம்பிக்கை உள்ளது.

புற்றுநோய் சிகிச்சை மேற்கொண்டிருந்த போது நான் இறந்து விடுவேன் என்று பயந்தேன். மேலும் ஒரு ரோஜா தன்னுடைய நிறத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சம் என்னிடமிருந்தது. அப்போது  எனக்கு மது பழக்கம் ஏற்பட்டது. இதுதான் என்னுடைய வாழ்வின் மோசமான தொடக்கமாகும். வாழ்க்கையை வெறுத்து இழப்பதற்கு துணிந்தேன். தற்போது எனக்கு ஒரு புத்துணர்வு கிடைத்துள்ளது. இவை அனைத்தையும் நான் எழுதிய புத்தகத்தில் விடாமல் குறிப்பிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியானது அவருடைய ரசிகர்கள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.