விநாயகரை வழிபட்டால் ஏற்படும் நன்மைகள் !

வருடந்தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.


விநாயகர் சதுர்த்தி அன்று வாழ்வில் நாம் பயன்படுத்தும் அன்றாட பொருட்களை பயன்படுத்தி பல வகைகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது . அவ்வகையான விநாயகரை வழிபட்டால் வாழ்வில் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை காண்போம் .

மஞ்சளில் செய்த பிள்ளையாரை வழிபட்டால் திருமண தடை நீங்கும். வெண்ணெயில் பிள்ளையார் செய்து அதை வழிபட்டால் நோய்கள் நீங்கும் .பசுஞ்சாணி ஆல் பிள்ளையார் செய்து வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் நடக்கும். வெல்லத்தால் செய்த பிள்ளையாரை வணங்கினால் சகல பாக்கியங்களையும் பெறலாம்.உப்பினால் செய்த பிள்ளையாரை வணங்கினால் எதிரிகளை எளிதாக வெல்லலாம் .

இவ்வாறாக விநாயகர் சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் பல்வேறு நன்மைகளை பெறலாம் .