தங்கம் விலை சவரனுக்கு ரூ.3000 உயர்வு! கிடு கிடு அதிகரிப்பால் பவுன் ரூ.35 ஆயிரம் ஆனது..!

சென்னையில் தங்கத்தின் விலை சவரன் ஒன்றிற்கு ரூ 3000 ரூபாய் உயர்ந்து விற்பனையாகி வருகிறது.


தங்கம் விலை கடந்த இரண்டு வாரங்களாகவே ஏறுமுகமாகவே காணப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 31,611 ரூபாயாக இருந்து வந்தது. கொரோனா அச்சம் காரணமாக தங்கம் விற்பனை இல்லாத நிலையிலும் தங்கத்தின் விலை அதிகரித்து வருவது அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அத்யாவசிய பொருட்களைத் தவிர மற்ற பொருட்களின் விற்பனை முற்றிலுமாக முடங்கியுள்ளது. ஆனால் சர்வதேச விலை நிலவரத்திற்கு ஏற்றார் போல இந்தியாவிலும் தங்கம் விலை ஏறிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை தற்போது 3000 ரூபாய் வரை உயர்ந்து கிட்டத்தட்ட 35000 வரை சென்றுள்ளது. ஒரு கிராம் தங்கம் இன்று 4330 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. 

தொழில்துறை முடக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் தங்களது முதலீட்டை செய்து வருகின்றனர். ஆகையால் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை மாற்றி தற்போது தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை உச்சம் கண்டு உள்ளதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.