கிடுகிடுவென உயரும் விலை..! விரைவில் தங்கம் 50ஆயிரம் ரூபாயாகும்! அதிர்ச்சி தரும் பின்னணி!

ஊரடங்கு மத்தியிலும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்வது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த மாதம் 24ம் தேதி முதல் இந்தியா முழுவதிலும் கடுமையான ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. நகைக்கடைகள், படைகள் முதலியன முற்றிலுமாக மூடப்பட்டன. இருப்பினும் ஊரடங்கு தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே போகிறது.

இந்த தொடர் விலை ஏற்றம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளுக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து விலையேற்றமாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முரடாக அமல்படுத்தப்பட்ட முதல் நாளில் ஒரு சவரன் தங்கம் 31,616 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 3,952 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று ஒரு சவரன் தங்கம் கிட்டத்தட்ட 35,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கமானது 4,447 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஊரடங்கும் முடிந்தபின்னர் நகைக்கடைக்கு செல்வோர் அதிகளவில் பணத்தை செலவழித்து தங்கத்தை வாங்கும் நிலை ஏற்படும் என்றார் பொதுவான கருத்து மக்களிடையே எழுந்துள்ளது.

கடைகள் திறக்கப்படுமாலும், மக்கள் வெளியே செல்லாத போதிலும் இந்த தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆண்டுக்கு 15,000 ரூபாய் உயர்ந்துள்ளது. கூடிய விரைவில் 10 கிராம் தங்கத்தின் விலை 50,000 ரூபாயை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த விலை ஏற்றமானது சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வினால் ஏற்படுவதாக பல்வேறு நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.