ஒரே வாரத்தில் தங்கம் விலை ரூ. 1,512 குறைவு. நம்புங்க!

பிப்ரவரி தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தப்பட்டு வந்த நிலையில், இன்று நம்ப முடியாத அளவில் குறைக்கப்பட்டுள்ளது.


பிப்ரவரி 24 ஆம் தேதி வரலாறு காணாத வகையில் ரூ. 34,000 ஐ தாண்டியது.. ஆனால் ஒரெ வாரத்தில் ரூ. 1,512/- குறைந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி தூய தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 4267 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 34,136 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.4,064/- ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 32,512 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.624 குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 3,986/- ஆகவும், ஒரு சவரன் விலை ரூ. 31,888/- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.656/- குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,185/- ஆகவும், ஒரு சவரன் விலை ரூ. 33,480/- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:

29.2.2020 - 1 grm – Rs. 4,185/-, 8 grm – 33, 480/- ( 24 கேரட்)

29.2.2020 – 1 grm – Rs. 3,986/-, 8 grm – 31,888/- (22 கேரட்)

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ. 47.40 ஆகவும், கிலோவுக்கு ரூ.47,400/- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..