ரூ. 34,000 ஐ தாண்டிய தங்கம் விலை! ஒரே நாளில் ரூ. 576/- குறைந்துள்ளது!

அமெரிக்கா, ஈரான் இடையே போர் பதற்றம் காரணமாக ஜனவரி முதல் வாரத்தில் தங்கம் விலை உயர்ந்தது.


அப்போது வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் தங்கம் ரூ. 31 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தாலும் பிப்ரவரி 18 ஆம் தேதியிலிருந்து ஏறுமுகமாகவே இருந்தது. இந்நிலையில் நேற்று (24.2.2020) மீண்டும் வரலாறு காணாத வகையில் ரூ. 34,000 ஐ தாண்டியது.. மேலும் சர்வதேச பொருளாதாரம் பாதிப்பைச் சந்திக்கும் நிலை காணப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி தூய தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 4,374 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 34,992 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.4,166/- ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 33,328 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,097/- ஆகவும், ஒரு சவரன் விலை ரூ. 32,776/- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.576/- குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,302/- ஆகவும், ஒரு சவரன் விலை ரூ. 34,416/- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:

25.2.2020 - 1 grm – Rs. 4,302/-, 8 grm – 34, 416/- ( 24 கேரட்)

25.2.2020 – 1 grm – Rs. 4,097/-, 8 grm – 32,776/- (22 கேரட்)

வெள்ளி விலையும் ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 600/- குறைந்துள்ளது.. நேற்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.53.30 ஆகவும் கிலோவுக்கு ரூ.53,300 ஆகவும் இருந்த வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ. 52.70 ஆகவும், கிலோவுக்கு ரூ.52,700/- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..