பா.ம.க.வின் 7 தொகுதியில் வேல்முருகன் போட்டி! தினகரனின் அதிரடி பேரம் ஆரம்பம்!

தங்கள் கட்சி ஜெயிக்க வேண்டும் என்று தேர்தலில் நிற்கும் கட்சிகளைத்தான் பார்த்திருப்போம். முதன்முறையாக பாட்டாளி மக்கள் கட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக களத்தில் இறங்குகிறார் வேல்முருகன்.


தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு தரவேண்டும் என்று வேல்முருகன் போராட்டம் நடத்தினார். இவர்களது கோரிக்கையை பெற்றுக்கொள்வதற்குக்கூட ஆளும் தரப்பில் யாரும் முன்வரவில்லை. அதனால் கோ ஹோம் மோடி, கோ ஹோம் இடப்பாடி என்று புதிய கோஷத்துடன் நாடாளுமன்றத் தேர்தலில் களம் இறங்கியிருக்கிறார் வேல்முருகன்.

வெளிப்படையாக மோடிக்கும் எடப்பாடிக்கும் எதிராக வேல்முருகன் பேசினாலும், அவரது நேரடி எதிர்ப்பு ராமதாஸ் மட்டும்தான். ராமதாஸை எதிர்ப்பதற்கு தன்னை தி.மு.க. பயன்படுத்திக்கொள்ளும் என்று எதிர்பார்த்தார். காடுவெட்டி குரு குடும்பத்தாருடன் பிரசாரம் செய்கிறேன் என்று சொன்னதையும் ஸ்டாலின் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்

ஸ்டாலினுடன் வேல்முருகன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இப்போது ஆதரவு தெரிவியுங்கள், சட்டமன்றத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று ஸ்டாலின் தரப்பு சொன்னதை வேல்முருகன் ஏற்கவில்லை. 

இப்போது அவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு தினகரன் கட்சி மட்டும்தான். மிகவும் தயக்கத்துடன் அங்கே பேசியவருக்கு இரண்டே இரண்டு சீட் மட்டும்தான் தரமுடியும் என்று கறார் காட்டியிருக்கிறார். அங்கே எங்களுக்கு 7 சீட் கொடுங்கள், பா.ம.க. நிற்கும் தொகுதிகளில் மட்டும் ஆட்களை நிறுத்தி, அவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்று அடம் பிடித்துவருகிறார். 7 சீட் கொடுத்தால் தமிழகம் முழுவதும் தினகரனுக்காக பிரசாரம் செய்வதாகவும் சொல்லியிருக்கிறார்.

வேல்முருகன் கோரிக்கையை ஏற்பதா வேண்டாமா என்று கிடப்பில் போட்டிருக்கிறார் தினகரன். 

யாராவது வேல்முருகனை பயன்படுத்துங்கப்பா..