வேண்டுமென்றால் முதலிரவை என் தந்தையுடன் நடத்திக்கொள் என்று கூறிய கணவர் மீது காவல்நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார்.
முதலிரவுக்கு அவசரமா? என் அப்பாவ யூஸ் பண்ணிக்கோ! புது மனைவிக்கு கணவன் கொடுத்த விபரீத அட்வைஸ்! விருதுநகர் திகுதிகு!
விருதுநகர் மாவட்டத்தில் கட்டையாபுரம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு பழனிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஜூன் மாதம் 6-ஆம் தேதியன்று திருமணம் நடந்துள்ளது.
திருமணத்திற்காக 11 சவரன் நகைகள், 20,000 ரொக்கப்பணம் முதலியவற்றை சீர்வரிசையாக பெண்வீட்டார் கொடுத்துள்ளனர். திருமணம் தடபுடலாக நடந்தது. ஆனால் அன்றிரவு புது பெண்ணுக்கு தலையில் இடி விழுந்தது போன்று பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
அதாவது, மாமனார், மாமியார், நாத்தனார் ஆகியோர் புது பெண்ணிடம் வந்து உங்களுக்கு இன்று இரவு முதலிரவு நடைபெறாது என்று கூறியுள்ளனர். இதனால் புதுப்பெண் அதிர்ந்துள்ளார். மேலும் இதுகுறித்து, தன்னுடைய பெற்றோரின் வீட்டிலும் கூறியுள்ளார். பின்னர் கணவரிடம் கேட்டபோது, "உலகத்துல 1000 பேருக்கு முதலிரவு நடக்காமல் இருக்கு.
இப்ப இதுக்கு என்ன அவசரம். என் அப்பா தொல்லை பண்ணதுனால உன்ன கல்யாணம் பண்ணேன். வேணும்னா அவர் கூட ஜாலியா இருந்துக்கோ. என்னை தொந்தரவு செய்யாதே" என்று அநாகரீகமாக பேசியுள்ளார்.
மேலும் மனைவிக்கு பழனிவேல் கொலை மிரட்டல்களும் விடுத்துள்ளார். இவற்றை தாங்கிக்கொள்ள இயலாத அந்த பெண் விருதுநகர் காவல் நிலையத்தில் புகுந்த வீட்டில் உள்ளோர் மீது புகார் அளித்துள்ளார். இந்த சம்பவமானது விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.