இந்தியப் பெண்ணை மடக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்..! திருமணம் நடக்குமா?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமனுடன் நெருக்கமாக பழகி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லை அவரது ரசிகர்கள் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர் .


ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல், மெல்பேர்னில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த வினி ராமன் என்ற பெண்ணுடன் நெருக்கமாக பழகி வருகிறார். மேக்ஸ்வெல் வினி ராமன் உடன் எடுத்து வரும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.

சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஜோடியாகப் பங்குபெற்ற மேக்ஸ்வெல், வினி ராமனின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, வினி ராமன் இந்த புகைப்படத்தில் மிகவும் அழகாக உள்ளார் என்று மேக்ஸ்வெல் கமெண்ட் செய்துள்ளார்.

மேக்ஸ்வெல்லின் ரசிகர்கள் அவரை எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று கேள்வி கேட்டு வரும் நிலையில் , இதுவரை அவரிடமிருந்து எந்த ஒரு தகவலும் திருமணம் பற்றி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . 

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் , பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் , இந்தியாவின் சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்ட வரிசையில் , மேக்ஸ்வெல் வினி ராமன் ஜோடியும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது .

ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் ஜான் ரைட் 2014ஆம் ஆண்டு இந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது .