50 ரூபாய்க்கு 2 பிளேட் மட்டன் பிரியாணி வேணும்! ஓட்டல் உரிமையாளருக்கு நேர்ந்த பரிதாபம்! அதிர்ச்சி சிசிடிவி!

மதுபோதையிலிருந்த 2 ஆட்டோ ஓட்டுநர்கள் 50 ரூபாய்க்கு 2 பிரியாணி கேட்டு கடை உரிமையாளரை தாக்கிய சம்பவமானது திருப்பத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அமைந்துள்ளது. வாணியம்பாடி பேருந்து நிலையத்திற்கு அருகே கலிம் என்பவர் "காஜா" என்ற உணவகத்தை நடத்திவருகிறார். 

இவருடைய உணவகத்திற்கு நேற்றிரவு ஜெய்பாரத், செல்வபிரபு ஆகிய 2 ஆட்டோ ஓட்டுநர்கள் மதுபோதையில் சென்றுள்ளனர். 240 ரூபாய் மதிப்புள்ள 2 பிரியாணி பொட்டலங்களை வெறும் 50 ரூபாய்க்கு பார்சல் செய்து தரவேண்டும் என்று அடாவடி செய்துள்ளனர.

இதற்கு கடை ஊழியர் மறுப்பு தெரிவித்ததால் இருவரும் முதலில் கடை ஊழியரை தாக்கியுள்ளனர். அதன்பின்னர் கடை உரிமையாளரையும் தாக்கியுள்ளனர். பதிலுக்கு கடை உரிமையாளரான கலீம் அவர்கள் இருவரையும் தாக்கியுள்ளார்.

இந்த சம்பவங்கள் கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளில் தெளிவாக பதிவாகியிருந்தன. உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபிறகு கோனாமேடு பகுதியை சேர்ந்த 2 ஆட்டோ ஓட்டுநர்களையும் கைதுசெய்து அழைத்து சென்றனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.