விரைவில் சாகப் போறேன்..! என்னுடைய கடைசி வேண்டுகோள் இது தான்..! கண் கலங்க வைத்த பரவை முனியம்மா!

தன்னுடைய இறப்புக்கு பிறகு செய்ய வேண்டியவற்றை பற்றி பரவை முனியம்மா அழுதுகொண்டே கூறியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் பரவை என்ற பகுதி அமைந்துள்ளது‌. இவர் பிறந்த பகுதியில் இவருடைய நாட்டுப்புற பாடலை சென்று பெரிதளவில் மவுசு உள்ளது. நேரடியா கிராமத்தில் இவ்வாறு ஆடிப்பாடி நடித்து கொண்டிருந்தபோது, இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தன. திருமணமாகி பிறந்த மகன் மாற்றுத்திறனாளியாவார்.

இந்நிலையில், பல்வேறு படங்களில் அவர் ஆடிப்பாடி நடித்து புகழ் பெற்றதால், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இவர் மீது அக்கறை ஏற்பட்டுள்ளது.  சியான் விக்ரம் கதாநாயகனாக நடித்த "தூள்" எனும் படத்தில் அவருக்கு பாட்டியாக நடித்து, ஒரு குத்து பாட்டிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இந்நிலையில் இவருக்கு வயதுமூபபின் காரணமாக படவாய்ப்புகள் குறைய தொடங்கின. இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக அவருக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. தன்னுடைய இறுதி சடங்கிற்கு பிறகு செய்ய வேண்டியவற்றை அழுதுகொண்டே தற்போது அவர் கூறியுள்ளார்,

அதாவது தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான மறைந்த ஜெயலலிதா அவர்கள் பரவை முனியம்மாவுக்கு வைப்பு தொகையாக 6 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். மாதந்தோறும் அதற்கு 6 ஆயிரம் ரூபாய் பென்ஷனாக கிடைக்கிறது. தான் இறந்த பிறகு அதனை தன்னுடைய மகனுக்கு வழங்குமாறு கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இந்த செய்தியானது அப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.