குற்றாலம் போலாமா? நம்பி சென்ற டிரைவர்! இளம்பெண் அரங்கேற்றிய படுபாதக செயல்! ரத்தத்தை உறைய வைக்கும் சம்பவம்!

கால் டாக்ஸி ஓட்டுநரை கொலை செய்த இளம்பெண்ணின் புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


சென்னையிலுள்ள அசோக்நகரில் நாகநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் கால்டாக்ஸி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். 6-ஆம் தேதி அன்று ஒரு குழுவானது குற்றாலத்திற்கு செல்வதற்காக நாகநாதனின் காரை வாடகைக்கு எடுத்தது.

8-ஆம் தேதி இரவன்று நாகநாதன் தன்னுடைய முதலாளிக்கு கால் செய்து நாளை இரவு திரும்பி விடுவதாக கூறியுள்ளார். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. உடனடியாக கால் டாக்ஸி உரிமையாளர் நாகநாதனின் மொபைலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவருடைய மொபைல் போன் "ஸ்விட்ச் ஆஃப்" செய்யப்பட்டிருந்ததால் கால்டாக்ஸி உரிமையாளர் அதிரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனிடையே மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி அருகே மகனின் சடலத்தை காவல்துறையினர் மீட்டெடுத்தனர். காரை வாடகைக்கு எடுத்த கும்பல் நாகநாதனை கொலை செய்துவிட்டு காரை திருடிச்சென்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி ஜங்ஷனில் நாகநாதன் காரை ஓட்டிச்செல்வது போன்ற சிசிடிவி கேமரா பதிவுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அந்த கும்பலின் ஒருவரான திருச்சியை சேர்ந்த ஜெயசுதா என்பவரின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். 

இந்த புகைப்படத்தை உபயோகித்து இந்த காரை ஓட்டிச்சென்ற பாதையை கண்டுபிடிப்பதில் காவல்துறையினர் மும்முரம்காட்டி வருகின்றனர். திருச்சி ஜங்ஷனில் இருந்து வேறு எங்கெல்லாம் அவர்களால் சென்று வைக்க இயலும் என்பது குறித்து காவல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் வாடகை காரை ஓட்டிச்சென்ற ஓட்டுநரை கொலை செய்து விட்டு காரை திருடிச்சென்ற 2 வழக்குகள் உள்ளன‌. இந்நிலையில் இந்த வழக்கிற்கும் அந்த வழக்கிற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என்ற ரீதியில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.