காதலனுடன் ஊர் சுற்றச் சென்ற இளம் பெண்! காவல் நிலையத்தில் கூறிய பகீர் காரணம்! ஆனால் வெளியான வீடியோ!

காதலனுடன் வெளியே சென்ற மாணவி மர்ம நபர்கள் தன்னை கடத்தி விட்டதாக பெற்றோரிடம் பொய் கூறிய சம்பவமானது மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் எனுமிடம் அமைந்துள்ளது. அங்குள்ள காவல் நிலையத்திற்கு திங்கட்கிழமை அன்று பெண் ஒருவர் தன்னுடைய பெற்றோருடன் புகாரளிக்க வந்திருந்தார். காவல்நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் கல்லூரியில் இருந்து தங்களுடைய மகளை மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்றதாகவும், அதன்பின்னர் அவர்களிடமிருந்து சண்டையிட்டு தங்களுடைய மகள் தப்பி வந்ததாகவும் கூறினர்.

காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பெண்ணை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். நடந்தது குறித்து நடித்து காட்டுமாறு அந்த பெண்ணிடம் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதற்கு அந்த பெண் சற்று தயங்கியுள்ளார். உடனடியாக அப்பகுதியில் சிசிடிவி கேமரா பதிவுகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பெண்ணே ஒருவரின் இருசக்கர வாகனத்தில் ஏறி செல்வதை காவல்துறையினர் கண்டனர். பின்னர் அந்த மாணவியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாயின. அதாவது அந்த பெண் தன்னுடைய காதலருடன் வெளியே சென்றதாகவும், வீட்டிற்கு வர தாமதமானதாகவும் கூறினார். பெற்றோரிடம் திட்டு வாங்க கூடாது என்பதற்காக இப்படி ஒரு நாடகம் ஆடியதாக கூறினார். ஆனால் பெற்றோர் இதனை விபரீதமாக எடுத்து கொண்டு காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளிப்பார்கள் என்று தான் நினைக்கவில்லை என்று கூறினார். பிறகு தான் செய்த தவறுக்கு காவல்துறையினரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர்கள் என்னிடம் அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவமானது நாக்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.