காதலியின் உடல் முழுவதிலும் சூடு வைத்த காதலன் அவருடைய உடலை வீட்டிற்கு வெளியே வீசிவிட்டு சென்ற சம்பவமானது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனி அறை..! கும்மிருட்டு! காதலி உடல் முழுவதும் சிகரெட் சூடு..! அந்த இடங்களில் வெட்டுக் காயம்! தூத்துக்குடி சைக்கோ காதலன்!
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூருக்கு அருகே அமைந்துள்ள செட்டியாபத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகளின் பெயர் கலைச்செல்வி. சக்திவேலுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. ஆகையால் அவரால் சரியாக வேலைக்கு செல்ல இயலவில்லை. இந்நிலையில் கலைச்செல்வியின் தாயார் திருப்பூருக்கு சென்று வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். கலைச்செல்வியும் அப்பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் பணியாற்றி வந்துள்ளார்.
இதனிடையே அதே பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்ற இளைஞருடன் கலைச்செல்விக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். திருப்பூரில் வசித்துவரும் தன்னுடைய தாயாரை காண விரும்புவதாக ஐயப்பனிடம் கலைச்செல்வி கூறியுள்ளார். ஐயப்பன் தான் அழைத்து செல்வதாக கூறி, கலைச்செல்வியை அழைத்து சென்றுள்ளான். 2 நாட்கள் ஐயப்பன் கலைச்செல்வியை நன்றாக பார்த்து கொண்டுள்ளான்.
அதன்பின்னர் கலைச்செல்வி ஒரு அறையில் அடைத்து எண்ண முடியாத அளவிற்கு துன்புறுத்தினான். உடல் முழுவதிலும் சிகரெட் சூடு, கலைச்செல்வியின் தலைமுடியை வெட்டுதல் முதலிய பல்வேறு கொடுமைகளை செய்துள்ளான். ஒருவழியாக கலைச்செல்வி ஐயப்பனிடம் தப்பித்து பசியும் பட்டினியுமாக செட்டியாபத்தின் சாலையோரத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக முதலுதவிக்கு பொதுமக்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கலைச்செல்வி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், தன்னுடைய நிலைக்கு ஐயப்பனே காரணம் என்று கலைச்செல்வி வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆனால் கலைச்செல்வியால் விரிவாக கூற இயலவில்லை. கலைச்செல்வி உடல்நலத்தில் தேர்ச்சி பெற்ற பின்னர் மீண்டும் விசாரணை நடத்துவது என்று காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவமானது தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.