தினம் தினம் வயிற்று வலி! துடியால் துடித்த பூஜா! அறுவை சிகிச்சை செய்து அதிர்ச்சியில் உறைந்த டாக்டர்கள்!

வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த சிறுமியின் வயிற்றில் ஒரு கிலோ முடி இருந்துள்ள சம்பவம் மருத்துவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் கோண்டா எனும் மாவட்டம் உள்ளது இங்கு வசித்து வரும் 14 வயது சிறுமி ஒருவர் கடந்த சில வாரங்களாகவே கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவருடைய பெயர் பூஜா. தொடக்கத்தில் சரியாகிவிடும் என்று மெத்தனமாக இருந்தாலும், கொஞ்சம் கூட முன்னேற்றம் அடையவில்லை என்பதால் பதறியடித்து கொண்டு அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

தொடக்கத்தில் மருத்துவர்களால் எளிதில் கண்டுபிடிக்க இயலவில்லை. பெற்றோரிடம் சி.எஸ்.டி ஸ்கேன் எடுத்து வருமாறு கூறியுள்ளனர். ஸ்கேன் ரிப்போர்டில் பூஜாவின் வயிற்றில் உருண்டையாக இருப்பது போன்று தெரியவந்துள்ளது.

பெற்றோரின் அனுமதியுடன் மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சையினை தொடங்கினர். அப்போது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. பூஜாவின் வயிற்றுக்குள் சுமார் 1.4 கிலோ எடையுடைய முடி உருண்டை இருந்துள்ளது. மருத்துவர்கள் வெற்றிகரமாக அதனை வயிற்றிலிருந்து வெளியே எடுத்தனர். 

பின்னர் பூஜா சற்று உடல் தேறிய பிறகு அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். பரிசோதனையில் பூஜாவுக்கு "ரெபுன்ஸல் ஸின்டிரோம்" (Rapunzel Syndrome) என்ற முடி தின்னும் பழக்கம் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவமானது மருத்துவர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது.