ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லை! நடிகர் விஜய்க்கு இளம் பெண்ணால் பிகில் பாடல் வெளியீட்டு விழாவில் நேர்ந்த தர்மசங்கடம்! வைரல் வீடியோ!

தளபதி விஜய் தற்போது இயக்குனர் அட்லி இயக்கத்தில் பிகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


இது அட்லீ மற்றும் விஜய் ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் நயன்தாரா , இந்துஜா , விவேக், ஆனந்த்ராஜ் , கதிர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியிடப்படும் என குழுவினர் திரைப்பட குழுவினர் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்திற்கான இசையை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றையதினம் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விமர்சையாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவை ஒளிபரப்பும் உரிமையை பிரபல தொலைக்காட்சி ஒன்று முழுவதுமாக பெற்றுவிட்டது. ஆகையால் இதை வேறு எந்த ஊடகமும் ஒளிபரப்ப இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளது .

இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் நடந்த காட்சிகளை அங்கு பங்கேற்ற ரசிகர்கள் தங்களது செல்போன்களில் படமாக எடுத்துள்ளனர் . அதனை அவர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளியான ஒரு வீடியோவானது சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது . அந்த வீடியோ பதிவில் தளபதி விஜயை இளம்பெண் ஒருவர்  கட்டி பிடிக்கிறார் . அப்போது அவர் விஜய்யிடம் ஒரு சில்மிஷ வேலை செய்வதைப் போன்று அமைந்துள்ளது அந்த வீடியோ.

இதனை பார்த்த ரசிகர்கள் அந்த இளம்பெண்ணை கண்டபடி கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர். ஒரு சில ரசிகர்கள் கட்டிப் பிடிக்கும் சாக்கில் விஜயிடம் சில்மிஷம் செய்துள்ளார் இந்த இளம்பெண் என்றும் கூறியுள்ளனர்.