32 வயது ஆணுக்கு மனைவி! திருமணமான 16 நாளில் 18 வயதான தீபா எடுத்த பகீர் முடிவு! அதிர வைக்கும் காரணம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திருமணமான 16 நாட்களில் 18 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த விளாமரத்துபட்டி பகுதியில் வசித்து வருபவர் சண்முகவேலு மற்றும் ஜீவ ரத்தினம் தம்பதியினர் ஆவர். இந்த தம்பதியினருக்கு ரகுபதி (வயது 32) என்ற ஒரு மகன் உள்ளார். ரகுபதி அந்த பகுதியில் உள்ள காற்றாலை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

 ரகுபதிக்கும் பொள்ளாச்சியை சேர்ந்த தீபா (வயது 18) என்பவருக்கும் கடந்த 30 ஆம் தேதி பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணம் முடிந்த பின்பு தீபா அவரது மாமனார் மாமியாருடன் கணவருடனும் விளாமரத்துபட்டியில் வசித்து வந்தார்.

இன்னிலையில் தீபா திடீரென்று தன்னுடைய கணவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த சம்பவம் அவரது பெற்றோர் இடையே மிகப் பெரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் குறித்து தீபாவின் தந்தை போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

தீபாவின் தந்தை ராமசாமி அளித்த புகாரில், தன்னுடைய மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அதனை கண்டறிந்து தருமாறும் கூறியிருந்தார். ராமசாமி இளநீர் வியாபாரம் செய்து வருகிறார் .இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

இவரது மூத்த மகளான தீபாவை பார்த்த ரகுபதியின் பெற்றோர் தீபாவை பெண் பார்ப்பதற்காக வந்துள்ளனர். திருமணத்திற்கான செலவை தங்கள் முழுவதுமாக ஏற்றுக் கொள்வதாகும் தங்களுடைய பெண்ணை மட்டும் தங்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தால் போதும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். நல்ல குடும்பம் என்பதால் தீபாவின் தந்தை ராமசாமி இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

திருமணத்திற்கு பின்பு தீபா தினம்தோறும் தன்னுடைய பெற்றோருக்கு மதிய வேளையில் போன் செய்து பேசுவதை தன்னுடைய வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். அந்த வகையில் சம்பவ தினத்தன்று தீபா, சுமார் ஒன்று முப்பது மணி அளவில் தன்னுடைய தந்தைக்கு போன் செய்து நல்லபடியாக பேசியிருக்கிறார். 

இதனையடுத்து சுமார் மூன்று முப்பது மணி அளவில் தீபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை ராமசாமிக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்தவுடன் ராமசாமியும் அவரது மனைவியும் அலறியடித்துக்கொண்டு தன் மகளை காண்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அவர்களது மகள் தீபா தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

தூக்கில் தொங்கும் பொழுது அவரது கால் தரையில் தொட்டபடி இருந்துள்ளது. இதனை பார்த்து சந்தேகம் அடைந்த ராமசாமி போலீசில் புகார் அளித்திருக்கிறார் . அது மட்டுமில்லாமல் தன் மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு இல்லை எனவும் அவர் கூறியிருக்கிறார்.

ஆகையால் இந்த சாவில் மர்மம் இருப்பதாக ராமசாமி கூறியிருக்கிறார் . போலீசார் ரகுபதியின் பெற்றோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார். தகவலை பெற்றுக்கொண்ட போலீசார் தற்போது தீபாவின் கணவர் மற்றும் அவருடைய பெற்றோர் ஆகியோருடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.