ஓரினச்சேர்க்கை! கேட்டதை கொடுக்க மறுப்பு! இளம்பெண்ணுக்கு 196 முறை கத்தி குத்து!ஆத்திரக்காரி காதலி செய்த பயங்கரம்!

கடன் தர மறுத்ததால் தோழியை ஓரினச்சேர்க்கையாளர் பெண்ணொருவர் கொலை செய்துள்ள சம்பவமானது சீன நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஃபாங் யோ என்ற இளம் பெண் தென் சீனாவில் உள்ள பிரபல மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவருடைய வயது 28. வாங் லீ என்ற 26 வயது பெண்ணும் அதே மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். இருவரும் லெஸ்பியன் உறவில் நாட்டமுடையவர்கள் என்பதால் காதலித்து வந்தனர். 

2017-ஆம் ஆண்டின் இறுதியில் இவர்களுடைய காதலுக்கு விரிசல்கள் ஏற்பட தொடங்கின. ஃபாங் சூதாட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அந்நாட்டில் பெயர் போன casino களில் அவர் சூதாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காக அவ்வப்போது வாங்கிடம் பணத்தை கடனாகப் பெற்று கொள்வார்.

சில மாதங்கள் கழித்து ஃபாங் சூதாட்டத்திற்காக மொத்தம் 84,000 பவுண்டுகளை கடனாக பெற்றது தெரியவந்துள்ளது. இதில் வாங்கின் பணம் 23,000 பவுண்டுகளாகும்.

2018-ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 30-ஆம் தேதியன்று நட்சத்திர ஹோட்டலில் இருவரும் சந்தித்தனர். சூதாட்டத்தில் மீண்டும் ஈடுபடுவதற்காக ஃபாங் வாங்கிடம் கடனாக பணத்தை கேட்டுள்ளார். அதற்கு வாங் மறுப்பு தெரிவித்த போது, மறைத்து வைத்திருந்த கத்தியின் மூலம் வாங்கை, ஃபாங் முதலில் தாக்கியுள்ளார். அந்த ஓட்டலின் 9-வது மாடி வரை துரத்தி சென்று உடம்பில் பல்வேறு இடங்களில் வாங்கை கத்தியால் தாக்கியுள்ளார். 

பலத்த காயங்கள் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே வாங் உயிரிழந்தார். உடற்கூறாய்வில் வாங்கின் உடலில் மொத்தம் 196 இடங்களில் கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

ஃபாங்கை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் நேற்று சீன நீதிமன்றம் ஃபாங்கிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த சம்பவமானது சீன நாட்டில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.