ஆசிட் வீச்சால் வெந்து போன இளம் பெண்ணின் முகம்! அரவணைத்து கரம்பிடித்து மனைவியாக்கிய இளைஞன்! நெகிழ்ச்சி செயல்!

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மணந்த இளைஞருக்கு ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் ஆசிட் வீச்சு தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட இளம்பெண்களை மீட்டெடுப்பதற்காக மீர் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களின் ஆபரேஷன் செலவுகளை இந்த சமூக அமைப்பானது ஏற்றுக்கொள்கிறது. மேலும் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு ஏற்ற உதவிகளையும் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணான அனுபமா என்பவர் இந்த ஃபவுண்டேஷன் மூலம் நல உதவிகளை பெற்று வருகிறார். இவருக்கு சமீபத்தில் ஜெகதீஷ் என்ற இளைஞருடன் திருமணம் நடைபெற்றது. 

அவர்களுடைய திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனிடையே இவர்களுடைய புகைப்படத்திற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதன்படி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வாழ்த்து கூறியுள்ளார்,

"நீங்கள் தான் மனிதன் ஜெகதீஷ். புதிய வாழ்வு அடியெடுத்து வைக்கும் அனுப்பமாவிற்கு மகிழ்ச்சி நிறைந்திருக்க வாழ்த்துக்கள். அவருடைய வாழ்வில் எப்போதும் அன்பு நிலைத்திருக்கும் என்று நம்புகிறேன்" என்று வாழ்த்தியுள்ளார்.

இந்த புகைப்படமானது  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.