ஆபாச செல்ஃபி! தமிழக டென்னிஸ் வீராங்கனை கைது! அதிர்ச்சியில் பெற்றோர்!

காதலர்கள் தற்போது தங்கள் காதல் வாழ்க்கையை சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. பொழுதுபோக்கிற்காகவும், காம இச்சைகளை அனுபவித்துக்கொள்வதற்காகவும் காதல் செய்வதுபோல் சூழல் நிலவுகின்றது. காதலர்கள் தங்கள் உடலுறவின் வீடியோக்களை ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவர் எடுப்பது போன்ற அவளை நிகழ்வுகள் ஆங்காங்கே நடக்கின்றன.


இதேபோன்று தன் காதலனை டென்னிஸ் வீராங்கனை ஒருவர் ஆள்வைத்து கடத்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவில்லிக்கேணி பகுதி சென்னையில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற வைணவ திருத்தலமும் இங்குள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் வாசவி என்பவர். இவர் டென்னிஸ் வீராங்கனை ஆவார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கைகளால் பரிசாக பல கோப்பைகளை வாங்கியவர். 

சென்னையின் மற்றொரு பகுதியான கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் நவீத் அஹமது. இவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டு பின்னர் அந்த நெருக்கம் காதலாக மாறியது. சிறிது காலம்வரை இன்பமாக இருந்த இருவர் பின்னர் தொடர்ந்து பல சண்டைகளை போட்டுள்ளனர். அவ்வப்போது பிரிந்தும் பிறகு சமாதானம் அடைந்தும் வாழ்ந்து வந்தனர்.

இதற்கிடையில், சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நவீத்தை கடத்தியுள்ளனர். அவரிடம் உள்ள ஐபோனையும், கை கடிகாரத்தையும் பறித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. நவீத்தின் காதலியான வசாவியே இந்த காரியத்தை செய்திருப்பது தெரியவந்தது.

 வாசவியை விசாரித்த காவல்துறையினரிடம் அவர் பல செய்திகளை கூறினார். அதாவது தாங்கள் நெருக்கமாக இருந்தபோது சில ஆபாச படங்களை நவீத் எடுத்து தன்னை மிரட்டிவந்ததாகவும் கூறியுள்ளார். இதனால் தான் ஆள்வைத்து நவீத்தை கடத்தியதாக வாக்குமூலம் அளித்தார். பின்னர் காவல்துறையினர் வாசவியையும், அவருக்கு உடந்தையாக இருந்த வடபழனி மகளிர் காவல்நிலைய தலைமைக்காவலர் மகனான பாஸ்கர் என்பவரையும் கைது செய்துள்ளனர்.