இரவில் வீட்டை விட்டு வெளியே சென்ற இளம்பெண்! சடலமாக வயல்வெளியில் மீட்கப்பட்ட பயங்கரம்! சேலம் திகுதிகு!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வயலில் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் மாவட்டத்தில் லாரி ஓட்டுனராக பணிபுரியும் குப்புசாமி என்பவருக்கு கௌசிகா என்ற ஒரு மகள் இருந்தாள். 23 வயதான இவர் மூன்று வருடத்திற்கு முன்னால் சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்து முடிந்ததில் இருந்து இந்த தம்பதியினருக்கு கருத்து வேறுபாடு நிலவி வந்திருக்கிறது. 

இந்நிலையில் சமீபத்தில் தனது கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக கோபித்துக் கொண்டு தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார் கௌசிகா. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்று விட்டு வருவதாக கௌசிகா தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் கௌசிகா பெற்றோர் அவரைத் தேடி அலைந்துள்ளனர். 

இந்நிலையில் வயல் பகுதியில் செல்லும் போது அங்கு மயங்கி கிடந்த கௌசிகாவை கண்டவர்கள் பதறிப்போய் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை செய்த டாக்டர்கள் கௌசிகா ஏற்கனவே இறந்துவிட்டார் என்ற தகவலை கூறினர் . இந்த செய்தியை கேட்ட அதிர்ச்சிக்குள்ளான அவரது பெற்றோர் கௌசிகா வின் கை கால்களில் காயம் இருந்ததை உணர்ந்து அவரை யாரோ கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த கௌசிகா வுக்கு ஒரு வயதில் ஒரு மகள் இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.