8 நாளில் திருமணம்! ஒரே ஒரு செல்போன் அழைப்பால் எமலோகம் சென்ற இளம் பெண்! பதற வைத்த சம்பவம்!

செல்போனில் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் பெண் உயிரிழந்த சம்பவமானது திண்டிவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திண்டிவனத்தில் சின்ன நெற்குணம் எனும் பகுதி அமைந்துள்ளது. இங்கு ஜான்சிராணி என்ற பெண் வசித்து வருகிறார். அப்பகுதியில் உள்ள தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். 

இவர் வழக்கமாக சென்னை-திருச்சி ரயில் பாதையை கடந்து செல்வார். இன்று காலை கம்பெனிக்கு செல்வதற்காக ரயில்பாதையை கடக்க முயன்ற போது திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த அதிவேக ரயில் ஜான்சி ராணி மீது மோதியுள்ளது. செல்போனில் பேசிக் கொண்டிருந்து ரயில் நிலையத்தை கடக்க முயன்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிவேகத்தில் வந்த ரயிலானது ஜான்சி ராணியின் மீது மோதியதால் அவர் தூக்கி அடிக்கப்பட்டார். ஜான்சி ராணிக்கு வரும் செப்டம்பர் 1-ஆம் தேதியன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருமணத்திற்கு 8 நாட்களுக்கு முன்னர் இவ்வாறு கொடூரமான முறையில் அவர் இறந்திருப்பது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை குறித்து செங்கல்பட்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.