அதுக்கு எனக்கு விருப்பமில்லை! பெண் கூறிய ஒரே ஒரு வார்த்தை! பதிலுக்கு ஆண் செய்த வெறிச் செயல்!

பெணொருவர் தன்னை பின் தொடர்ந்த ஆணிடம் தனக்கு விருப்பமில்லை என்று கூறியதால் அவர் அவரை தாக்கியுள்ள சம்பவமானது பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரித்தானிய நாட்டில் மான்செஸ்டர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் கேப்ரியல் வெல்ஷ். இவருடைய வயது 18. இவர் தன்னுடைய தோழியான கைய்ல் மெக்லார்டுடன் இணைந்து சாலையில் சென்றுள்ளார்.

சில இளைஞர்கள் கேப்ரியலை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். அவர்கள் கேப்ரியலை கேலி செய்து காதலிப்பதாக அநாகரீகமாக செயல்பட்டு வந்தனர். அவர்களை அனுப்புவதற்காக தனக்கு விருப்பமில்லை என்று கூறியுள்ளார். இருப்பினும் அவர்கள் கேப்ரியலை பின் தொடர்ந்தே வந்துள்ளனர். கேப்ரியலுக்கு மிகவும் சங்கடமாக இருந்துள்ளது. மேலும் விருப்பமில்லை என்று மீண்டும் மீண்டும் கூறியுள்ளார்.

ஒரு பெண் தன்னை நிராகரிப்பதை அந்த இளைஞரால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. மிகவும் ஆத்திரம் அடைந்த அவர் ஓங்கி கேப்ரியலின் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார். கேப்ரியல் என் கண்கள் வீங்கி போய் விட்டன. அவருடைய முகம் மிகவும் முகம் கோரமாக மாறியது.

இளைஞர்கள் கேப்ரியலை தாக்கியதோடு மட்டுமல்லாமல், அவளின் தோழியான மெக்லார்டையும் தாக்கியுள்ளனர். இருவரையும் அங்கிருந்தோர் காப்பாற்ற ஓடி வந்ததால் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

அந்த இளைஞர்களின் அடையாளம் யாருக்கும் தெரியாத காரணத்தினால் அவர்களை எளிதில் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த சம்பவமானது பிரித்தானிய நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.