அக்கா வீட்டுக்கு தான் போறேன்னு சொன்னாங்க..! தங்கை கூறிய பகீர் தகவல்..! ஆனால் கிணற்றுக்குள் சடலமாக கிடந்த குருலட்சுமி!

விருதுநகர் மாவட்டத்தில் ஆடு மேய்க்க சென்ற சிறுமி ஒருவர் கடந்த இரண்டு நாட்களுக்கு பின்பு சடலமாக கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


விருதுநகர் மாவட்டத்தில் வேண்டுராயபுரம் என்ற ஊர் அமைந்துள்ளது. இங்கு கருப்பசாமி ராஜலட்சுமி எனும் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 9 வயதில் வசந்த குருலட்சுமி என்ற மகளும் உள்ளார். இவர்களது அடிப்படை தொழிலே ஆடு மேய்ப்பது தான்.

இந்த தம்பதியினர் ஆடு மேய்ப்பது தங்களுடைய வழக்கமாகக் கொண்டுள்ளனர் அந்த வகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக இவருடைய மூத்த மகள் குரு லட்சுமி மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரும் இணைந்து அருகில் இருந்த பகுதிக்கு ஆடு மேய்ப்பதற்காக சென்றுள்ளனர். இருவரும் ஒன்றாக இணைந்து ஆடு மேய்ப்பதற்காக சென்ற போதிலும் இளைய மகள் மட்டும் வீடு திரும்பியிருக்கிறார்..

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குரு லட்சுமியை அந்த பகுதி முழுவதும் தேடி வருகின்றனர். எங்கு தேடியும் குரு லட்சுமி கிடைக்காததால் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சிறுமி காணாமல் போன வழக்கை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் குரு லட்சுமியை பல இடங்களிலும் தேடி வந்தனர் கடந்த இரண்டு நாட்களாக காவல்துறையினர் தீயணைப்புத்துறையினர் என பலரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது நிலையில் இன்று காலை சிறுமி குரு லட்சுமி சடலமாக கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

உடனடியாக போலீசார் சிறுமியின் சடலத்தை மீட்டு அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இலட்சுமியின் மரணத்திற்கு யார் காரணம் எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.