அந்தரங்க வீடியோவை நண்பனிடம் ஷேர் செய்த காதலன்! கண்டுபிடித்து அந்த உறுப்பை அறுத்து எரிந்த காதலி! பதை பதைக்க வைக்கும் செயல்!

அந்தரங்க வீடியோக்களை நெருங்கிய நண்பரிடம் பகிர்ந்ததால் காதலனின் ஆணுறுப்பை காதலி வெட்டியது அர்ஜென்டினாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்தவர் பிரெண்டொ பார்ட்டினி. இவருடைய வயது 28. இவருடைய காதலியின் பெயர் செர்ஜியோ பெர்னாண்டஸ். இவருடைய வயது 42. இருவரும் நெருக்கமாக பல இடங்கள்  சுற்றித்திரிந்தனர்.

2017-ஆம் நவம்பர் மாதத்தில் இருவரும் ஒரு விடுதி அறையில் உடலுறவு புரிந்துள்ளனர். அப்போது பார்ட்டினி செர்ஜியோவின் கண்களை துணியால் கட்டினார். பின்னர் தன்னிடம் இருந்த கத்தியால் அவருடைய ஆணுறுப்பை வெட்டினார். இதனால் செர்ஜியோ வலி தாங்க முடியாமல் கடுமையாக அலறினார்.

அவருடைய அலறல் சத்தத்தை கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பார்ட்டினியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். முதலில் பார்ட்டினி கூறுகையில், "செர்ஜியோ என்னிடம் தவறாக நடக்க முயன்றதாலேயே நான் இவ்வாறு செய்தேன்" என்று பொய்யாக வாக்குமூலம் அளித்தார்.

அதன்பின்னர் காவல்துறையினர் அவரை துருவித்துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார், "எங்கள் இருவரின் அந்தரங்க வீடியோக்களை செர்ஜியோ தன்னுடைய நண்பர்களிடம் காட்டி மகிழ்ந்து வந்தார். இதனால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். அதனால்தான் அவரை பழி வாங்குவதற்காக இப்படி ஒரு செயலை செய்தேன்" என்று ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்கின் தீர்ப்பானது நேற்று வெளியிடப்பட்டது. தீர்ப்பில் பார்ட்டினிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது அர்ஜென்டினாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.