மருத்துவமனையில் திக் திக் நிமிடங்கள்! சிறுமிக்கு 45 வயது நபரால் ஏற்பட்ட விபரீதம்!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சிறுமியைப் பார்த்து ஆபாச சைகை காட்டிய துப்புரவு தொழிலாளி கைது செய்யப்பட்டான்.


மும்பையில் உள்ள ஜேஜே மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக தனது பாட்டியை அழைத்துக்கொண்டு 17 வயது சிறுமி சென்றுள்ளார். பாட்டிக்கு மருத்துவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது, அந்த அறைக்கு வெளியே சிறுமி நின்று கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் அதே மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிய நிதின் வகேலா என்பவன் சிறுமியை பார்த்து ஆபாச செய்கை காண்பித்துள்ளான். இதுபற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் அந்த சிறுமியும் உறவினர்களும் முறையிட்டுள்ளனர். அப்போது நிதின் வகேலா குறித்து பெண் ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் அடுக்கடுக்கான பாலியல் ரீதியான அத்துமீறல் புகார்களை தெரிவித்தனர்.

காம இச்சை அதிகம் கொண்ட நிதின் வகேலா செவிலியர்கள் உடைமாற்றும் அறைக்குள் அனுமதியின்றி சென்று வந்தது தெரியவந்தது. செவிலியர்கள் அவனை பலமுறை எச்சரித்துள்ளனர். மன்னிப்பு என்ற ஒரே ஒரு வார்த்தையை பயன்படுத்தி கொண்டு அவன் மீண்டும் மீண்டும் அத்துமீறி உள்ளான். மேலும் செவிலியர்கள் உடைமாற்றும் ஜன்னலில் சிறுநீர் கழித்துவிட்டு செல்வதையும் அவன் வாடிக்கையாக வைத்துள்ளான்.

மருத்துவமனையில் கூட்டம் அதிகமாக இருக்கும் வேளையில் பெண்களை தெரியாதது போல் தொடுவது, இடிப்பது போன்ற வேலைகளிலும் அவன் ஈடுபட்டு வந்துள்ளான். நிதின் வகேலா மீது மலைபோல் பாலியல் புகார்கள் குவியவே அந்தச் சிறுமியும் அவரது உறவினர்களும் ஜேஜே மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதை அடுத்து 45 வயது நிரம்பிய நிதின் வகேலாவை போலீசார் கைது செய்தனர். அவன் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.