டைம் பாஸ்க்கு தான் காதலிச்சேன்! அசால்ட்டாக கூறிய காதலன்! காதலி எடுத்த விபரீத முடிவு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் என்னும் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் காதலன் ஏமாற்றியதால் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குடியாத்தம் பகுதிக்கு அருகில் உள்ள ஹைதர்புரத்தில் வசிப்பவர் நந்தகுமார்.  இவருக்கு வயது 26. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் அந்தப் பகுதியில் கல்லூரியில் படிக்கும் 19 வயது பெண்ணிடம் தன் காதலை தெரிவித்துள்ளார். அதனை அந்த பெண் ஏற்றுக்கொண்டப்பின்பு இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.

சில மாதங்களுக்கு பிறகு அந்தப்பெண் நந்தகுமாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்தார். இதனால் நந்தகுமார் விலகி சென்றுள்ளார்.விடாமல் அந்த பெண் தொந்தரவு செய்ய, கோபமடைந்த நந்தகுமார், "உன்னையெல்லாம் கல்யாணம் பண்ண முடியாது. ரொம்ப தொந்தரவு பண்ண கொலை பண்ணிடுவேன் என்று எச்சரித்துள்ளார்.",

மேலும் டைம் பாசுக்கு தான் காதல் பண்ணுனேன், கல்யானம்னு வந்து நின்னா எப்டினு வேறு கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த பெண், குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு வெளியே வந்து விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்தார். அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். இப்போது சிகிச்சை பெற்று வருகிறார். நந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்