மகள் தற்கொலைக்கு காரணமான கள்ளக் காதலன்! காத்திருந்து பழி தீர்த்த தந்தை! பதற வைக்கும் சம்பவம்!

இந்த காலத்து காதலர்கள் காதலை   உயர்ந்த மாண்பாக கருதுவதில்லை. அவர்கள் பொழுதுபோக்குகாக காதல் செய்கின்றனர். புளித்து போன பிறகு அவிழ்த்துவிடுகின்றனர்


இதேபோன்று ஒரு நிகழ்வு அரியலூர் மாவட்டம் செந்துறை என்னும் பகுதியில் நடந்துள்ளது.  அந்த பகுதியை சேர்ந்த திருமணமான குமரவேல் என்பவருக்கு திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஆனந்தி என்ற பெண்னுடன் கள்ளக் காதல் செய்து வந்துள்ளனர். இருவரும் இணைந்து பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்துள்ளனர்.  இனிப்பான நாட்கள் கடந்து போக, அவர்கள் கள்ளக் காதலின் இருண்ட நாட்கள் தொடங்கின.

இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்ள தொடங்கினர். பின்னர் பலமுறை பிரிந்து சென்று மீண்டும் சமரசமடைந்து இணைந்தனர். ஆனால் கடைசியாக போட்ட சண்டையில், வாக்குவாதம் முற்றியது. அப்போது ஆனந்தியின் கள்ளக் காதலன் அவளிடம் மீண்டும் வரமாட்டேன் என்று உறுதியாக கூறியுள்ளார்.

இதனை தாங்க இயலாத ஆனந்தி மனமுடைந்தார். பின்னர் கள்ளக் காதலன் இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியாது என்று கூறி தற்கொலை செய்து கொண்டார். தன் மகளின் சாவினை தாங்கிக்கொள்ள இயலாத ஆனந்தியின் தந்தை, தன் மகளின் இறப்பிற்கு காரணமான அவளின் காதலனை பழிதீர்க்க துடித்தார்.

நேற்று ஆனந்தியின் கள்ளக் காதலன் நன்றாக குடித்துவிட்டு மது போதையில் நடுரோட்டில் தள்ளாடிக்கொண்டிருந்தான். இதனை உபயோகித்து கொண்ட ஆனந்தியின் தந்தை, அவனை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டார். இதையறிந்த செந்துறை காவல்துறையினர், ஆணந்தியின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.