அந்தரங்கமாக இருந்த வீடியோ! மிரட்டிய காதலன்! கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!

கல்லூரி மாணவி ஒருவர் தன் அந்தரங்க வீடியோ வெளியாகிடுமோ என்ற அச்சத்தில் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு IIT தேர்வு மையத்தில் உத்திரப்பிரதேச மாநிலத்தின் மாணவி ஒருவர் IIT நுழைவு தேர்விற்காக பயிற்சி பெற்று வந்தார். இவர் ஒரு விடுதியில் தங்கி படித்து வந்தார். திடீரென்று கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் தன் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடனே விடுதி ஆய்வாளர்கள் அவளின் பெற்றோரிடம் தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் செய்த முதல் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதாவது அந்த பெண்ணின் அந்தரங்க வீடியோ மற்றும் போட்டோவை எடுத்து அவளுடன் பள்ளியில் படித்த ஒரு மாணவன் மிரட்டியதால் பெண் தற்கொலை செய்துக்கொண்டதாக போலீசார் கூறியுள்ளார்.

இருவரும் காதலித்ததாகவும் அப்போது இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இதனை அந்த மாணவன் தனது செல்போனில் பதிவு செய்துள்ளான். பிறகு அவ்வப்போது அதை வைத்தே மாணவியை மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளான். ஒரு கட்டத்தில் உல்லாசத்துக்கு மாணவி மறுத்துள்ளார். இதனால் வீடியோவை வெளியிடப்போவதாக அவன் மிரட்டியுள்ளான்.,

இதனால் ஏற்பட்ட பயத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.