10ம் வகுப்பில் பாஸ்! ஆனாலும் தற்கொலை செய்த மாணவி! அதிர வைக்கும் காரணம்!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கவில்லை என்ற விரக்தியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.


சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தாமஸ் சாலையில் கிரி என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகள் சக்தி பத்தாம் வகுப்பில் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் படித்து வந்த அதே பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் குறிப்பிட்ட பாடப்பிரிவினை கேட்டார்.

ஆனால் மதிப்பெண் சற்று குறைந்ததால் பள்ளி நிர்வாகம் அந்த பாடப்பிரிவினை வழங்க மறுத்தது.தான் தேர்ந்தெடுத்த பிரிவு கிடைக்காத விரக்தியினால் மனமுடைந்த சக்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். சில நிமிடங்களில், அவளின் பெற்றோர் அவரை தேனாம்பேட்டை பகுதியில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சக்தி, சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.