விடிய விடிய டிவியில் அந்த படம்! கண்டுபிடித்த பெற்றோர்! மாணவி எடுத்த விபரீத முடிவு!

இரவு நேரங்களில் அதிகமாக டிவி பார்த்துக்கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்ததால் மனம் உடைந்த மகள், தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் உள்ள கிண்டியில கல்லூரி மாணவி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இந்தப் பெண்ணுக்கு இரவு நெடுநேரம் கண்விழித்து தொலைக்காட்சியில் அந்த படம் பார்க்கும் பழக்கம் உண்டு. இதனை தவிர்க்குமாறு பெற்றோர் நிறைய முறை கூறிய போதும் அந்தப் பெண் கண்டுகொள்ளவில்லை. நேற்று முன் தினம் வழக்கம் போல அந்த மாணவி இரவில் தூங்காது நெடுநேரம் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார்.

மறுநாள் காலையில் பெற்றோர் அவரை சரமாரியாக வசை பாடி உள்ளனர்‌. தன் பெற்றோர் தன்னை சகட்டுமேனிக்கு திட்டியதை தாங்கிக்கொள்ள இயலாத மாணவி தன் அறைக்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். நெடுநேரம் ஆகியும் அவர் வெளி வராததை கண்டு பெற்றோர் அஞ்சினர்.

சிறிது நேரத்தில் அந்த மாணவியின் அலறல் சத்தம் அபாய ஒலி போல் ஒலித்துக்கொண்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். 

அந்த மாணவி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயற்சித்ததும், உபயோகித்த கயிறு அவரின் எடைக்கு ஈடு கொடுக்காததால் அறுந்து போனது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக மாணவி கீழே விழுந்துள்ளார்.

இந்த நிகழ்வு சம்பந்தமாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வழக்குப்பதிவு செய்து மாணவியை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கீழே விழுந்ததனால் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியின் பெற்றோரிடம் கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.