அவருக்கு என்னை விட 27 வயசு அதிகம்! ஆனால் அவர் கட்டிலில் 15 வயது இளைஞன்! 25 வயது கர்ப்பிணி பெண் வெளியிட்ட படுக்கை அறை ரகசியம்!

இத்தாலியில் தன்னைவிட 27 வயது அதிகமாக உள்ள மிகப் பெரிய கோடீஸ்வரரை திருமணம் செய்துகொண்ட 25 இளம்பெண், தற்போது கர்ப்பமாக இருக்கும் சூழ்நிலையில் தனது கணவரோடு கூடிய படுக்கையறை ரகசியத்தை முதன்முறையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.


ஜியான்லுக்கா வாச்சி என்பவர் இத்தாலியைச் சேர்ந்த மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆவார். இவருக்கு வயது 52. இவர் கடந்த 2 ஆண்டுகளாக 25 வயது மிக்க இளம்பெண்ணான ஷேரான் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்த நிலையில், தற்போது ஷேரான் கர்ப்பமாக உள்ளார். இந்த காதல் ஜோடிக்கு இடையே 27வயது வித்தியாசம் இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அவர்கள் இருவரும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, எங்களுக்குள் அதிக வயது வித்தியாசம் இருப்பது உண்மைதான். ஆனால் அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. என்னதான் என்னுடைய தாடி வெள்ளை நிறமாக மாறி விட்டாலும் என் உடம்பில் 15 வயது சிறுவனின் ஆற்றல் நிரம்பியுள்ளது என்று ஜியான்லுக்கா கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் எங்களுடைய காதல் சற்று கடினமாகத்தான் இருந்தது. என்னுடைய காதலி ஷேரான் என்னை மிகவும் கஷ்டப்படுத்தினாள். நான் அவளை சந்தித்த அந்த இரவே அவள் என் வலையில் விழுவாள் என்று எண்ணினேன். ஆனால் அது தவறு என்பதை அவர் நிரூபித்துக் காட்டிவிட்டார்.

மேலும் ஷேரான் தன்னைவிட 27 வயது மூத்தவர் ஒருவரை காதலித்து குறித்து மனம் திறந்த பொழுது, ஜியான் லுக்கா ஒரு திறந்த புத்தகம். அவரிடமிருந்து தினம்தோறும் நான் ஒரு புதிய புதிய வித்தியாசமான விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். சொல்லப்போனால் அவரிடம் 15 வயது சிறுவனிடம் இருக்கும் ஆற்றல் நிரம்பி உள்ளது என்று அவர் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நாங்கள் இருவரும் பெற்றோர்கள் ஆவோம் என்று நினைத்து பார்க்கவே இல்லை. எனக்குள் இன்னொரு உயிர் வளர்ந்து கொண்டிருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது மிகப்பெரிய அதிசயமாக எங்களுக்கு தோன்றுகிறது என அவர் கூறி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.