அது வேணும்னா அந்தரங்க உறுப்பை கட் பண்ணனும்! ஆண்கள், பெண்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

ஜெர்மனியில் ஒருவர் தன்னுடைய அடையாள ஆவணத்தில் பாலினத்தை மாற்ற வேண்டுமென்றால் அவர்கள் கட்டாயம் தங்களது இனப்பெருக்க உறுப்பினை அகற்றிக் கொள்ள வேண்டுமென்ற சட்டத்தை எதிர்த்து பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.


வெளிநாடுகளில் ஒருவர் தன்னுடைய பாலினத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில் அவர் பலவித விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்பது கட்டாயம். அந்தவகையில் கடந்த 2011ஆம் ஆண்டிற்கு முன்பு வரை ஒருவர் பாலினத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் அவர் முதலில் தன்னுடைய இனப்பெருக்க உறுப்பை அகற்ற வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருந்து வந்துள்ளது.

இந்த சட்டத்தை பின்பற்றி பலரும் தங்களின் பாலினத்தை மாற்றிக் கொண்டுள்ளனர் என்பது அதிரவைக்கும் உண்மையாகும். அதை நிரூபிக்கும் வகையில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் டிசீபோ பால்வின்கல் என்ற ஒரு பெண் தான் ஆணாக மாற ஆசைப்பட்டிருக்கிறார். அப்போது வழக்கத்தில் சட்டமாக இருந்ததை அந்தப் பெண் பின்பற்றினார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய இனப்பெருக்க உறுப்புகளை அகற்றிவிட்டு ஆணாக உருமாறினார் அவர் என்பது நிதர்சனமான உண்மை.

இவை அனைத்தையும் அவர் செய்ததற்கான முக்கிய காரணம் தனக்கான அடையாளம் நிச்சயம் வேண்டும் என்பதற்காக தான். அதுமட்டுமில்லாமல் அவர், அவருக்கும் அவரைப் போல் பாதிக்கப்பட்ட பலருக்கும் நேர்ந்த இந்த நிகழ்விற்கு உரிய இழப்பீடு வேண்டும் என்று குரல் எழுப்பியது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு கட்டாயத்தின் பெயரில் இனப்பெருக்க உறுப்புகளை இழந்தவர்களுக்கான உரிய இழப்பீடு ஸ்வீடன் நாடு அளித்தது. மேலும் இதுபோல் இனப்பெருக்க உறுப்புகளை இழந்த மற்ற நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்குமாறு அந்நாட்டு அதிகாரிகளிடம் பரிந்துரையும் செய்தது. குறிப்பாக ஜெர்மனி நாட்டிடமும் இதனை தங்களுடைய கோரிக்கையாக ஸ்வீடன் நாட்டு அதிகாரிகள் வைத்தனர். ஆனால் இன்றளவும் அந்த கோரிக்கையை ஜெர்மனியில் ஏற்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.

இப்படியாக இன்னும் பலரை நாம் கூறிக் கொண்டே போகலாம் . உதாரணமாக கடந்த 1998-ம் ஆண்டு சாரா என்ற பெண் தன்னுடைய இனப்பெருக்க உறுப்புகளை இழந்து அவதிக்கு உள்ளாகி இருக்கிறார். அவர் இந்த செயல் மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் மனித உரிமை மீறல் என்றும் கூறியிருக்கிறார். இது தங்களுக்கு மட்டுமல்லாமல் தங்களுக்கு பின்பு வரும் எதிர்கால சந்ததியினருக்கும் உரியது. ஆகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு அந்த நாட்டு அரசு வழங்கவேண்டும் எனவும் அவர் ஆதங்கத்துடன் கூறியிருக்கிறார்.