தி.மு.க.வுக்கு அடுத்த பொதுச்செயலாளர் தேர்வு - 29ஆம் தேதி பொதுக்குழு கூடுகிறது

தி.மு.க.வின் பொதுச்செயலாளரான க. அன்பழகன் மறைந்ததை அடுத்து அவருடைய பதவிக்கு புதிதாக ஒருவரைத் தேர்ந்தெடுக்க அக்கட்சியின் பொதுக்குழு இம்மாதம் 29ஆம் தேதி கூடுகிறது.


அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று இத்தகவலை வெளியிட்டுள்ளார். அவர் இது குறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில், ” தி.மு.க.வின் பொதுக்குழு இம்மாதம் 29ஆம் தேதி ஞாயிறு காலை 10 மணியளவில் , சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும்.

இதில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்ளவேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது. இக்கூட்டத்துக்கு ஸ்டாலின் தலைமைவகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.