கூல்ட்ரிங்ஸ்ல மயக்க மருந்து! கற்பழிச்சான்! இப்ப, வேற ஒருத்தனை கல்யாணம் செய்ய சொல்றான்! அதிர வைத்த பெண்ணின் மரண வாக்குமூலம்!

புதுச்சேரியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் மரண வாக்குமூலமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அரியாங்குப்பத்தில் சின்னகடை என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் மதுரை என்பவர் புகைப்பட கடை நடத்தி வந்துள்ளார். இந்த கடையில் 31 வயது இளம்பெண் ஒருவர் உதவியாளராக சேர்ந்திருந்தார். இந்தப் பெண்ணை சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று பெண் பார்த்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த இளம்பெண் மிகவும் சோகமாக காணப்பட்டிருந்தார். செவ்வாய்க்கிழமையன்று அந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் அந்த பெண் உயிருக்கு போராடி கொண்டிருந்த போது, அவரிடமிருந்து அப்பகுதி காவல்துறையினர் மரண வாக்குமூலத்தை பெற்றனர்.

அந்த மரண வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. "தன்னுடைய மரணத்திற்கு புகைப்பட கடை உரிமையாளரான மதுரையே காரணம். குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அதனை கூறி மிரட்டி வந்து மீண்டும் என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்" என்று மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவாக இருந்த மதுரையை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.