உலககோப்பை நாயகன் கவுதம் கம்பிர் ஓய்வு

37 வயதான இந்தியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான கவுதம் கம்பிர் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமான இவர் 147 போட்டிகளில் 5238 ரன்களை எடுத்துள்ளார். 58 டெஸ்ட் போட்டிகளில் 4154 ரன்களையும் எடுத்துள்ளார்.

2007ம் ஆண்டு நடைபெற்ற T20 இறுதி போட்டியில் இவர் அடித்த 75 ரன்கள் இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணமாக அமைந்தது. 2011ம் ஆண்டு நடந்த ஒரு நாள் போட்டிக்கான உலகக்கோப்பை இறுதி போட்டியில்  இலங்கைக்கு எதிராக இவர் குவித்த 97 ரன்களும் இந்திய அணி வெற்றி பெற உதவியது.

IPL போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தலைமை தாங்கி  இரண்டு முறை கோப்பையை கைப்பற்றி தந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.