கோவில் பிரசாதத்தில் மயக்க மருந்து..! தச்சுத் தொழிலாளியின் 2வது மனைவிக்கு பக்கத்து வீட்டு இளைஞர்களால் நேர்ந்த விபரீதம்!

சென்னை விருகம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த வந்த பெண்ணை மயக்க மருந்து அளித்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


சென்னையிலுள்ள விருகம்பாக்கத்தில் அமைந்திருக்கும் காந்திநகர் பகுதியில் தச்சு வேலை பார்க்கும் ஒருவர் இரண்டாவதாக 26 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தச்சு வேலை பார்க்கும் இவருக்கும் முதல் மனைவிக்கும் பிறந்த குழந்தைகளும் இரண்டாவது மனைவியும் ஒரே இல்லத்தில் ஒன்றாக வசித்து வருகின்றனர். 

அந்த பெண்ணின் கணவர் தச்சு வேலை பார்ப்பதற்காக கடந்த மாதம் வெளியூருக்கு சென்று இருக்கிறார். இந்நிலையில் கடந்த மாதம் 18ஆம் தேதி இவர்களது வீட்டின் அருகில் உள்ள கோயிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. 

அந்த இடமே திருவிழா கோலம் பூண்டிருந்த நிலையில் இளம்பெண்ணின் வீட்டின் அருகில் இருந்த ஹரிஷ் குமார் மற்றும் ரமேஷ் குமார் ஆகியோர் கோவில் பிரசாதம் என்றும் கூறி மயக்க மருந்து கலந்த இனிப்பை அந்த பெண்ணிற்கு வழங்கியுள்ளனர். 

அந்தப் பெண்ணும் கோவில் பிரசாதம் என்று எண்ணி அதனை வாங்கி சாப்பிட்டு இருக்கிறாள் . அதனை அடுத்து சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வீட்டின் அருகில் மயங்கி விழுந்திருக்கிறார். இரவு நேரம் என்பதால் அருகில் யாரும் இல்லாத காரணத்தால் அந்த இளைஞர்கள் இருவரும் அந்தப் பெண்ணை அவரது வீட்டிற்கு தூக்கி சென்றுள்ளனர். பின்னர் அந்த பெண்ணை கூட்டாக இணைந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் .இது மட்டுமில்லாமல் அவர்கள் அந்த பெண்ணை ஆபாசமாக வீடியோ பதிவு செய்துள்ளனர்.

இதோடு நிறுத்திக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அதே வீடியோவை காட்டி மிரட்டி அந்த பெண்ணை தங்களுடைய ஆசைக்கு இணங்க வைத்து உள்ளனர் . அந்தப் பெண்ணும் இவர்களுடைய மிரட்டலுக்கு பயந்து அவர்கள் கூறியதை கேட்டு நடந்திருக்கிறார். இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

 பெண்களை மிரட்டி ஆபாசம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தல், பெண்களை தாக்குதல் தாக்குதல், நகை பறித்தல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அந்த காம கொண்டு அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.