திருச்சியில் பைக்கை ரோட்டோரம் நிறுத்தி ஒதுங்கிய கள்ளக்காதல் ஜோடி! பின் தொடர்ந்து வந்த 3 ஆண்கள்! புதருக்குள் அரங்கேறிய கற்பழிப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கள்ள காதலனை கட்டிப்போட்டு அவரது கண்முன்னே உடன்வந்த பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் கதற கதற கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .


புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு அமைந்திருக்கும் தனியார் நிறுவனத்தில் 24 வயது ஆண் ஒருவரும் 23 வயது பெண் ஒருவரும் பணியாற்றி வந்துள்ளனர். இருவருமே ஏற்கனவே திருமணமானவர்கள். இருப்பினும் அவர்களது வீட்டினருக்கு தெரியாமல் கள்ள உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். தினந்தோறும் வேலையை முடித்துவிட்டு ஒன்றாக பைக்கில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

எப்பொழுதும் போல கடந்த 25ஆம் தேதி இருவரும் தங்களது வேலையை முடித்துவிட்டு திருச்சி மார்க்கமாக ஒன்றாக பைக்கில் சென்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது மணிகண்டம் பகுதியில் பைக்கை ரோட்டோரத்தில் நிறுத்திய அந்த கள்ளக்காதல் ஜோடி, அருகில் இருந்த புதருக்குள் நுழைந்து உல்லாசமாக இருந்துள்ளனர். உல்லாசமாக இருந்த வேளையில் அவர்கள் இருவரையும் மூன்று கயவர்கள் சுற்றி வளைத்துள்ளனர். அந்த மூவரும் கைகளில் கத்தி உள்ளிட்ட பல ஆயுதங்களை வைத்து இருந்துள்ளனர்.

இதனை பார்த்த அந்த கள்ளக்காதல் ஜோடி அதிர்ச்சி அடைந்துள்ளனர். செய்வதறியாது திகைத்து நின்ற நேரத்தில் அந்த இளைஞரை மூன்று நபர்களும் இணைந்து சரமாரியாக தாக்கி கைகளை கட்டி போட்டுள்ளனர். பின்னர் மூன்று பேரும் இணைந்து அந்த பெண்ணை கதற கதற கற்பழித்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் அந்த பெண்ணின் கம்பல், கொலுசு, சங்கிலி உள்ளிட்ட நகைகளையும் அந்த இளைஞனிடம் இருந்த செல்போன் மற்றும் பணம் ஆகிய அனைத்தையும் பறித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு தப்பி விட்டனர். 

இதனால் பாதிப்படைந்த அந்த கள்ளக்காதல் ஜோடி, விராலிமலை பகுதியில் இருக்கும் காவல் நிலையத்தில் தனித்தனியாக சென்று புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முருகன் (வயது 22) , நந்தகுமார் (வயது 20), ஹேமராஜ் (வயது 28) உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்துள்ளனர். விசாரணையின் போது அந்த மூவரும் இணைந்து அந்த பெண்ணை கதற கதற பாலியல் பலாத்காரம் செய்தது ஊர்ஜிதமானது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.