உள்ளாட்சித் தேர்தல்! 2 மாநகராட்சிகள் கேட்க ஜி.கே வாசன் திட்டம்?

நடைபெறப்போகும் உள்ளாட்சி தேர்தலில் ஜி. கே.வாசன் அதிமுகவிடம் இரண்டு மாநாகராட்சிகள் கேட்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


நடப்பாண்டில் வரவிருக்கும் டிசம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் என்று அரசு முடிவெடுத்துள்ளது. ஆகையால் ஒவ்வொரு கட்சியிலும் உள்ளாட்சி தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்த ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

அதிமுக பொறுத்தவரையில் ஏற்கனவே பாமக, தேமுதிக ,பாஜக என பல கட்சிகள் கூட்டணியில் இருந்து வருகின்றன. இவை அனைத்து கட்சிகளின் உள்ளாட்சித் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு ஏற்கனவே அதிமுகவுடன் ஆலோசனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஜி. கே. வாசன் அதிமுகவுடன் புதியதாக கூட்டணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

கூட்டணியில் இணைந்த ஜி .கே .வாசன் உள்ளாட்சி தேர்தலில் தமக்கு திருப்பூரையும், ஆவடியில் ஏற்கனவே தமாகா நகராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றிய வகையில் ஆவடியையும் கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதேபோல் தாமாக கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்த வரும் யுவராஜ் ஈரோடு மாநகராட்சியை கேட்பதாகவும் கூறப்படுகிறது ஈரோடு , ஆவடி மற்றும் திருப்பூர் ஆகிய மூன்று தொகுதிகளைப் பற்றி பரிசீலனை நடந்து வருகிறது இவற்றில் ஏதேனும் இரண்டு நிச்சயம் தங்களுக்கு வேண்டும் என்று ஜி கே வாசன் எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.